சாதி மதத்தை முன்வைத்து தேர்தல் ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை தேவை - உச்சநீதிமன்றம்

சாதி மதத்தை முன்வைத்து தேர்தல் ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை தேவை என தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
x
உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்ட அரசு கட்சி தலைவர்கள் தேர்தல் விதிமீறி பிரச்சாரம் செய்வதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடாரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் வழக்கு பதிவு செய்யவும் நோட்டீஸ் அனுப்பவுமே தங்களுக்கு அதிகாரம் இருப்பதாகவும் விதிகளை மீறும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் இல்லை எனவும் தெரிவித்தார். இதையடுத்து பேசிய நீதிபதிகள் சாதி, மதத்தை முன்வைத்து அரசியல் ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை தேவை என அறிவுறுத்தினார். வழக்கு விசாரணை நாளை செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்