"அமமுக வேட்பாளர் பந்தயத்திலேயே இல்லை" - தமிழச்சி தங்கபாண்டியன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி சின்னம் வழங்கியதால் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும், அமமுக பந்தயத்திலேயே இல்லை என்றும் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் தெரிவித்துள்ளார்.
x
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி சின்னம் வழங்கியதால் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும், அமமுக பந்தயத்திலேயே இல்லை என்றும் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் தெரிவித்துள்ளார். தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள குடியிருப்புகளில் தமிழச்சி தங்கபாண்டியன் நடந்து சென்று பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக துலுக்காணத்தாமன் கோவிலில் சென்று வழிபாடு செய்தார். மேலும் தன்னை பெண்கள் ஆர்வத்துடன் வரவேற்பதாகவும், ஸ்டாலினுக்கு பெண்கள் மத்தியில் ஆதரவு பெருகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.   

Next Story

மேலும் செய்திகள்