தாங்கள் வெற்றிபெறும் தொகுதிகளில் காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை அகற்றப்படும் - கமல்ஹாசன்
கோவை கொடிசியா மைதானத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் விழா நடைபெற்றது.
அதில் பேசிய கமல்ஹாசன் தாங்கள் வெற்றிபெறும் தொகுதிகளில் காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை அகற்றப்படும் என்றார். பெண்களுக்கு விவசாயம் உள்பட அனைத்து துறையிலும் ஆண்களுக்கு நிகரான ஊதியம் கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவித்தார். உலகம் முழுவதும் பரவி உள்ள தமிழர்களை ஒன்றிணைத்து அவர்களை பாதுகாப்போம் எனவும் உறுதியளித்தார். மாநில ஆளுநர் அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படும் நிலையை உருவாக்குவோம் எனவும் கமல் குறிப்பிட்டார். சென்னை நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக மாற்றப்படும் எனவும் உறுதியளித்தார். தாங்கள் வெல்லும் தொகுதிகள் அனைத்தையும் பசுமையானதாக மாற்றுவோம் எனவும் கமல் உறுதி அளித்தார்.
Next Story