அ.தி.மு.க - தி.மு.க தேர்தல் அறிக்கை : வாக்குறுதிகளில் சில ஒற்றுமைகள்

அ.தி.மு.க., மற்றும் தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் சில ஒற்றுமைகள் உள்ளன.
அ.தி.மு.க - தி.மு.க  தேர்தல் அறிக்கை : வாக்குறுதிகளில் சில ஒற்றுமைகள்
x
கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வருவது, "நீட்" தேர்விலிருந்து  தமிழக மாணவர்களுக்கு விலக்கு, கல்வி கடன் தள்ளுபடி உள்ளிட்டவற்றில் அதிமுகவும், திமுகவும் ஒரே மாதிரியாக வாக்குறுதிகள் அளித்துள்ளன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை உள்ளிட்ட விஷயங்களிலும் இருகட்சிகளும் ஒரே மாதிரியாக வாக்குறுதி அளித்துள்ளன. நதிகள் இணைப்பு ,  அண்டை மாநிலங்கள் புதிய அணை கட்டும் முயற்சி தடுப்பு, விவசாய கடன் தள்ளுபடி, கேபிள் டிவி கட்டணம் குறைப்பு, அரசு ஊழியர்களுக்கு சலுகை உள்ளிட்ட விஷயங்களிலும் அதிமுக மற்றும் திமுக ஒரே மாதிரியான வாக்குறுதிகளை அளித்துள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்