பாஜகவுக்கு போட்டியாக காங்கிரஸ் பொதுக்கூட்டம் : குமரியில் 13 - ந்தேதி பிரசார கூட்டம் - ராகுல் காந்தி பங்கேற்பு

கன்னியாகுமரியில், வருகிற 13 ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி, பங்கேற்க உள்ளார்.
பாஜகவுக்கு போட்டியாக காங்கிரஸ் பொதுக்கூட்டம் : குமரியில் 13 - ந்தேதி பிரசார கூட்டம் - ராகுல் காந்தி பங்கேற்பு
x
அதிமுக சார்பில் சென்னையில் நாளை நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.  இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதற்கு போட்டியாக, வருகிற 13 ஆம் தேதி, கன்னியாகுமரியில் பொதுக்கூட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கும் என்றும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் கூட்டம் நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்