வைகோ தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் - போலீஸ் தடியடி

நெல்லையில் கருப்பு கொடி போராட்டம் நடத்திய மதிமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட திடீர் மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.
வைகோ தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் - போலீஸ் தடியடி
x
கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஆரல்வாய்மொழி, காவல்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் கருப்புகொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கோஷங்கள் எழுப்பிய படி வந்தனர். இதையடுத்து மதிமுகவினருக்கும் பா.ஜ.க.வினருக்கும்  இடையே மோதல் உருவாகும் சூழல் நிலவியது. இருதரப்பிலும் கற்கள் வீசப்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் காவல்கிணறு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  



"அரசு விழாவில் கலந்து கொள்ள மோடி தமிழகம் வந்தால் எதிர்ப்போம் "-  வைகோ


Next Story

மேலும் செய்திகள்