"திமுக போல நாங்கள் கூட்டணி தேடி செல்லவில்லை" - அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, தூத்துக்குடியில் கபடி போட்டி நடைபெற்றது.
திமுக போல நாங்கள் கூட்டணி தேடி செல்லவில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, தூத்துக்குடியில் கபடி போட்டி நடைபெற்றது. போட்டியை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக வுடன் பல்வேறு கட்சிகள் கூட்டணி சேர விருப்பம் தெரிவித்து வருவதாகவும் திமுகவை போல, கூட்டணியை தேடி அதிமுக செல்லவில்லை என்றும் கூறினார். மேலும், திமுகவில் இருக்கிறோமா, இல்லையா என வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் கூறியபோது அவர்களை திமுக சமாதானம் செய்து அழைத்து வந்ததாகவும் சுட்டிக் காட்டினார். தேமுதிக வுடன் விரைவில் கூட்டணி இறுதி செய்யப்படும் எனவும் கடம்பூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்தார் 

Next Story

மேலும் செய்திகள்