"பாகிஸ்தான் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்" - தம்பிதுரை

கரூரில் அதிமுக சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது
பாகிஸ்தான் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் - தம்பிதுரை
x
கரூரில் அதிமுக சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதனை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் பேசுகையில், பெருகி வரும் வேலைவாய்ப்பு திண்டாட்டத்தை போக்க அதிமுக சார்பில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறினார். மத்திய பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் எதுவும் இல்லை என்றார். தீவிரவாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்