ரூ.2000 நிதியுதவி திட்டம் : திமுக, அதிமுக காரசார விவாதம்...

2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி தேர்தலுக்கானது அல்ல என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
x
பல்வேறு தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி தேர்தலுக்கானது அல்ல என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏவுமான பொன்முடி, தேர்தலை மையப்படுத்தி 2 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். துணை முதலமைச்சர் தாக்கல் செய்தது நிஜ பட்ஜெட் என்றும், 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்தது நிழல் பட்ஜெட் என்றும் பொன்முடி விமர்சித்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார். போதிய வருமானம் இன்றி தவிக்கும் விவசாயி உள்ளிட்ட ஏழை தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். விவசாயிகள், ஏழைகள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டதில் தவறேதும் இல்லை என்றும் முதலமைச்சர் பதிலளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்