"தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் யாகம் நடத்தியிருப்பது கண்டனத்துக்குரியது" - கி.வீரமணி

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் யாகம் நடத்தியிருப்பது கண்டனத்துக்கு உரியது என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் யாகம் நடத்தியிருப்பது கண்டனத்துக்குரியது - கி.வீரமணி
x
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் யாகம் நடத்தியிருப்பது கண்டனத்துக்கு உரியது என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு அலுவலகங்களில் மதம் சார்ந்த சின்னங்கள், கடவுள் உருவங்கள், நிகழ்வுகள் இடம் பெறக்கூடாது மறைந்த முதலமைச்சர் அண்ணா ஆணை பிறப்பித்ததை சுட்டிக் காட்டியுள்ளார். அண்ணாவின் பெயரில் கட்சியும், ஆட்சியும் நடக்கும் நிலையில், இதுபோன்று யாகம் நடத்தியது, கண்டனத்துக்குரியது என்றும், சட்டவிரோதம் என்றும் அவர் கூறியுள்ளார். ஐதீகத்தை நம்புவோர், உயர் பதவி வேண்டி நள்ளிரவில் கால பைரவருக்கு நடத்துவதே இந்தயாகம் என்று கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்