ஹெச்.ஏ.எல் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடி ஆர்டர்

நிர்மலா சீதாராமன் பொய் சொல்வதாக ராகுல் குற்றச்சாட்டு
ஹெச்.ஏ.எல் நிறுவனத்துக்கு ரூ.1  லட்சம் கோடி ஆர்டர்
x
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 1 லட்சம் கோடி ரூபாய்க்கு  ராணுவ தளவாடங்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாரமன் பொய் சொல்கிறார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளதுடன் இதற்கான ஆவணங்களை மக்களவையில் நாளை சமர்ப்பிக்க வேண்டும், இல்லையெனில் பதவி விலக வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஒரு பொய்யை மறைப்பதற்காக பல பொய்களை பாஜக அரசு சொல்கிறது என்றும் தனது ட்விட்டர் பதிவில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி 

ராகுல்காந்தியின் இந்த குற்றச்சாட்டை, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முற்றிலுமாக மறுத்துள்ளார். இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 1 லட்சம் கோடி ரூபாய்க்கு ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகக் கூறவில்லை என்றும், ராகுல்காந்தி அறிக்கையை முழுமையாக படிக்காமல் நாட்டை தவறாக வழிநடத்துகிறார் என்றும் தனது டுவிட்டர் பதிவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில்,  2014-ம் ஆண்டிலிருந்து 2018-ம் ஆண்டு வரை 26 ஆயிரத்து 570 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 73 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்த அனுமதி பணிகள் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளதுடன், இந்த விவகாரத்தில் நாட்டை தவறாக வழி நடத்தும் ராகுல் பதவி விலக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்