5 தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

5 மக்களவை தொகுதி பாஜக நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி புதுடெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார்.
5 தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
x

தமிழகத்தில் நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மக்களவை தொகுதி பாஜக நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி, புதுடெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார். அப்போது, தமிழகத்திற்கு கடந்த 4 ஆண்டுகளில் செயல்படுத்திய பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறிய அவர்,  மத்தியில் ஆளும் பாஜக அரசை போல வேறு எந்த அரசும் தென் இந்தியாவுக்கு நன்மைகள் செய்தது கிடையாது என்றார். தமிழக இளைஞர்களில் சுமார் 4 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் பிரதமர் நரேந்திரமோடி அப்போது சுட்டிக்காட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்