ரபேல் விவகாரம் : "தேசப் பாதுகாப்பில் சமரசம்" - ப. சிதம்பரம் கடும்தாக்கு

பிரான்ஸ் நாட்டுடனான ஒப்பந்தப்படி, 126 ரபேல் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்ட நிலையில் 36 விமானங்களை மட்டுமே வாங்குவதன் மூலம் தேசப் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளப்படுகிறது என்று ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
ரபேல் விவகாரம் : தேசப் பாதுகாப்பில் சமரசம் - ப. சிதம்பரம் கடும்தாக்கு
x
பிரான்ஸ் நாட்டுடனான ஒப்பந்தப்படி, 126 ரபேல் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்ட நிலையில் 36 விமானங்களை மட்டுமே வாங்குவதன் மூலம் தேசப் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளப்படுகிறது என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளபடி, மிகக் குறைவான தொகைக்கு, ஏன் 36 விமானங்களை மட்டுமே வாங்க வேண்டும். இந்த மர்மத்துக்கு காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். முந்தைய அரசு குறிப்பிட்ட விலையுடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் வரை குறைவாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றால், ஏன் 126 விமானங்களையும் வாங்காமல் 36 விமானங்களை மட்டும் வாங்க வேண்டும் என்றும் தமது சமூக வலைதள பதிவில் சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்