வருமான வரி நோட்டீசை எதிர்த்து தினகரன் மனு - 16 ஆண்டுக்கு பின்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை

வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து தினகரன், தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது உயர்நீதிமன்றம்.
வருமான வரி நோட்டீசை எதிர்த்து தினகரன் மனு - 16 ஆண்டுக்கு பின்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை
x
வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன்,  தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் வரும் 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது. கடந்த 1987 முதல் 1998ஆம் ஆண்டு வரை தினகரன் தாக்கல் செய்த வருமான வரிக் கணக்குகளை மறுஆய்வு செய்வது தொடர்பாக, கடந்த 2001ஆம் ஆண்டு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை ரத்து செய்யக் கோரி தினகரன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், 16 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பினரின் கோரிக்கையை ஏற்று, விசாரணையை டிசம்பர் 10ஆம் தேதிக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தள்ளிவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்