குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கமல்ஹாசன் ஆய்வு

சென்னை பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வரும் மக்களிடம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கமல்ஹாசன் ஆய்வு
x
எழில் நகரில் உள்ள குடிசை மாற்று குடியிருப்பு பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என மக்கள் நீதி மய்யத்தின் விசில் செயலியில் புகார்கள் வந்ததால் கமல்ஹாசன், இந்த ஆய்வை மேற்கொண்டார். ஆய்வின் போது அப்பகுதியினரிடம் அடிப்படை வசதிகள் மற்றும் குறைகள் குறித்து, அவர் கேட்டறிந்தார். பின்னர்,  பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்