சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் - பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை வரும் 24-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் - பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
x
சிக்கிம் மாநிலத்தை விமான போக்குவரத்துடன் இணைக்கும் நோக்கில், பாக்யாங் நகரில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. காங்டாக்கிலிருந்து 30 கி.மீ. தொலைவில் சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 350 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் 100வது விமான நிலையம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. இந்த புதிய விமான நிலையத்தில் அக்டோபர் முதல் வாரத்தில் விமான சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்