ஏழு சட்ட மசோதாக்களும் இன்றே நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது

தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைபடுத்துதல் உள்ளிட்ட 7 சட்ட முன்வடிவுகள் இன்று ஒரே நாளில் தமிழக சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
ஏழு சட்ட மசோதாக்களும் இன்றே நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது
x
* பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான சட்ட முன் வடிவை அறிமுகப்படுத்துகிறார். 

* தனியார் சட்டக்கல்லூரிகள் நிறுவுவதற்கான சட்ட முன்வடிவை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிமுகம் செய்து வைக்க உள்ளார். 

* சிவ்நாடார் மற்றம் சாய் பல்கலைக் கழகத்திற்கான சட்ட முன் வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிமுகம் செய்து வைக்கிறார்.

* வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, கரும்பு கொள்முதல் விலையை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான சட்ட முன் வடிவை அறிமுகப்படுத்த உள்ளார்.

* நில உச்ச வரம்பு நிர்ணய திருத்த மசோதாவை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிமுகம் செய்து வைக்கிறார்.

*  வன்னியகுல சத்திரியர் பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் சட்ட முன் வடிவை அமைச்சர் வளர்மதி அறிமுகப்படுத்துகிறார்.

* இந்தஏழு சட்ட மசோதாக்களும் இன்றே நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.

* மேலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லோக்ஆயுக்தா சட்ட முன்வடிவு வருகிற 9ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு, அன்றே நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Next Story

மேலும் செய்திகள்