திருச்சி கிராப்பட்டி அருகே பல்லவன் ரயில் தடம்புரண்டு விபத்து

திருச்சி மாவட்டம், கிராப்பட்டி அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் நிறுத்தப்பட்டிருந்த பல்லவன் அதிவிரைவு ரயில் 3 மணி நேரத்திற்கு பிறகு புறப்பட்டது..
திருச்சி கிராப்பட்டி அருகே பல்லவன் ரயில் தடம்புரண்டு விபத்து
x

காரைக்குடியிலிருந்து, திருச்சி வழியாக பல்லவன் பயணிகள் அதி விரைவு ரயில், சென்னை வந்து கொண்டிருந்தது. இந்த ரயில், திருச்சி மாவட்டம், கிராப்பட்டி அருகே வந்த போது, அதன் என்ஜின் திடீரென்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் அதிர்ச்சியடைந்த ரயில் ஓட்டுநர், ரயிலை இயக்காமல் பாதியிலேயே நிறுத்தினார். விபத்து குறித்து தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள், தடம் புரண்ட ரயிலை, சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் விபத்துக்குள்ளாகி பாதி வழியில் நிறுத்தப்பட்டதால், பயணிகள் சிரமத்திற்கு ஆளாயினர். தடம் புரண்ட எஞ்சின் சரி செய்யப்பட்டதால் பல்லவன் அதிவிரைவு ரயில் 3 மணி நேரத்திற்கு பிறகு புறப்பட்டது.இதனிடையே, காரைக்குடி, திண்டுக்கல் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள், அதே வழித்தடத்தில் செல்வதற்கு அனுமதி கிடைக்காமல் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன..

Next Story

மேலும் செய்திகள்