கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட சிறுவர்கள்..என்கவுண்டரால் மாய்ந்த இளைஞர்கள்.. பதறவைத்த அதிர்ச்சி சம்பவம்

x

பதாவுன் பகுதியில் சலூன் கடை நடத்தி வந்த முகமது ஷாஜித் என்ற இளைஞருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த வினோத் தாக்கூர் என்பவருக்கும் இடையே, கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த வினோத்தின் 3 குழந்தைகளை, முன்விரோதம் காரணமாக, முகமது ஷாஜித் கழுத்தை அறுத்துள்ளார். இதில் 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மற்றொரு குழந்தை படுகாயத்துடன் உயிர் தப்பியது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தப்பிக்க முயன்ற கொலையாளியை பிடிக்க முயன்றபோது, அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. அப்போது போலீசார் என்கவுண்ட்டர் செய்ததில், ஷாஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே, சுட்டுக்கொல்லப்பட்ட முகமது ஷாஜித்தின் சலூன் கடையை அப்பகுதி மக்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்