அயோத்தி ராமர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்

x

ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்ற ராம‌ர் கோயில் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு முதன் முறையாக பிரதமர் மோடி, அயோத்தி சென்றார். இதையடுத்து, அயோத்தி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த‌து. கோயில் செல்லும் வழி நெடுகிலும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்த‌து. இதையடுத்து ராமர் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி, ராம‌ர் சிலை முன்பு தரையில் விழுந்து வணங்கினார். பின்னர், தாமரை மலர்கள் வைக்கப்பட்ட தட்டு மூலம் ஆரத்தி எடுத்து வழிபட்டார். அப்போது, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்