"கோயில்கள் வெறும் தரிசிக்க வேண்டிய இடங்கள் அல்ல ஆனால்..." - மோடி சொன்ன கருத்து

x

அசாம் மாநிலம் கவுஹாத்தியில், 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இதற்காக விழா திடலுக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வருகை தந்த பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், மலர்தூவி வரவேற்றனர். அவர்களை நோக்கி பிரதமர் மோடி கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உடனிருந்தார். பின்னர் விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, நமது புனித யாத்திரைகள், நமது கோவில்கள் வெறும் தரிசிக்க வேண்டிய இடங்கள் அல்ல என்றும், நமது நாகரிகத்தின் பல்லாயிரம் ஆண்டு பயணத்தின் அழியாத அடையாளங்கள் என்றும் குறிப்பிட்டார். நாட்டின் சுதந்திரத்திற்குப்பின் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள், வழிபாட்டுத் தலங்களுக்கான முக்கியத்துவதை உணரவில்லை என குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்