கடைகளில் விற்பனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசிகள்

கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு சந்தை விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
x
இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடைகளில் விற்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

தற்போது கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில், நேரடியாக மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளின் மருந்து கடைகளில் தடுப்பூசிகள் விற்பனைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Next Story

மேலும் செய்திகள்