"18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1000"

பஞ்சாப்பில் ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என, ஆம் ஆத்மி கட்சி உறுதி அளித்துள்ளது.
x
பஞ்சாப்பில் ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என, ஆம் ஆத்மி கட்சி உறுதி அளித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. இதனை ஒட்டி, தமது கட்சியின் பத்து அம்ச திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் போதைப் பொருள் இல்லாத மாநிலமாக பஞ்சாப் மாற்றி அமைக்கப்படும் என உறுதி அளித்தார். பஞ்சாப் மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் கட்சி கவனம் செலுத்தும் என்றும், ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் மாநிலம் வளர்ச்சியடைந்து வளம் பெற 10 அம்ச 'பஞ்சாப் மாடலை' தயாரித்துள்ளதாக கூறினார். 
 பஞ்சாபில் அமைதியை கொண்டு வருவோம் என்றும், ஊழலற்ற மாநிலமாக மாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார். மாநிலத்தில் கல்வி மற்றும் பள்ளிகளை மேம்படுத்துவதில் ஆம் ஆத்மி கவனம் செலுத்தும் என்றும், பஞ்சாபில் 16 ஆயிரம் மொஹல்லா கிளினிக்குகள் அமைக்கப்பட்டு மாநிலத்தின் அனைத்து குடிமக்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்