சமையல் எண்ணெய் லிட்டருக்கு ரூ.20 வரை விலை குறைய வாய்ப்பு? கலால் வரி குறைப்பின் எதிரொலி

சமையல் எண்ணெய் மீதான கலால் வரி குறைப்பு "லிட்டருக்கு ரூ.20 வரை விலை குறையும்
x
சுத்திகரிக்கப்படாத சோயா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெயின் கலால் வரி 5 சதவீதம்  குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல சுத்திகரிக்கப்பட்ட  பாமாயிலின் அடிப்படை கலால் வரி 17 புள்ளி 5 சதவீதத்தில் இருந்து 12 புள்ளி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் சுத்திகரிக்கப்பட்ட  சோயா மற்றும் சூரிய காந்தி எண்ணெயின் அடிப்படை கலால் வரி 32 புள்ளி 5 சதவீதத்தில் இருந்து 17 புள்ளி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சமையல் எண்ணெய்களின் மீதான கலால் வரி குறைப்பால் சந்தைகளில் ஒரு லிட்டர் சமையல் எண்ணெயின் விலை 5 முதல் 20 ரூபாய் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்