வாக்கு வங்கி அரசியல் செய்யவில்லை - பிரதமர் மோடி

தாங்கள் வாக்கு வங்கி அரசியல் செய்வது இல்லை என்றும், மக்களுக்கு சேவை செய்யவே முன்னுரிமை அளித்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வாக்கு வங்கி அரசியல் செய்யவில்லை - பிரதமர் மோடி
x
தாங்கள் வாக்கு வங்கி அரசியல் செய்வது இல்லை என்றும்,  மக்களுக்கு சேவை செய்யவே முன்னுரிமை அளித்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 18 ஆயிரம் கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
 
அப்போது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி நாடு மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தின் விலைமதிப்பில்லா நேரத்தை வீணடித்துள்ளதாக குற்றம் சாட்டினார். 
  
நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாடு என்கிற பெயரில் 10 ஆண்டு காலமாக நாட்டில் ஊழல் மட்டுமே நடைபெற்றதாக தெரிவித்த பிரதமர், இதனால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட இரண்டு மடங்கு கடினமாக பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.
 
நாட்டில் உள்ள ஒரு சில அரசியல் கட்சிகள், குறிப்பிட்ட சாதி மற்றும் மதத்திற்கு மட்டும் அரசின் சலுகைகளை வழங்கி சமூகத்தில் வேறுபாட்டை உருவாக்கி, அதனை வாக்கு வங்கி அரசியலாக மாற்றியதாக குற்றம் சாட்டினார்.
 
தாங்கள் வாக்கு வங்கி அரசியல் செய்வது இல்லை என்றும் மக்களுக்கு சேவை செய்யவே முன்னுரிமை அளித்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி அப்போது தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்