டெல்லியில் நடைபெறும் ஆளுநர்கள் மாநாடு - தொடக்க உரையாற்றிய குடியரசுத் தலைவர்

ஆளுநர்கள் மக்களுடன் நேரடி தொடர்பு வைத்திருக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெறும் ஆளுநர்கள் மாநாடு - தொடக்க உரையாற்றிய குடியரசுத் தலைவர்
x
அனைத்து மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களின், 51 ஆவது மாநாடு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் மற்றும் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் கலந்து கொண்டுள்ளனர் சட்டம் ஒழுங்கு, கொரோனா பாதிப்பு, தடுப்பூசிகள் நிலவரம், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது. கூட்டத்தில் தொடக்க உரை ஆற்றிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், கொரோனாவை கட்டுப்படுத்த நமது முன்களப் பணியாளர்கள் மிக தீவிரமாக பணியாற்றி வருவதாக கூறினார். இந்தியாவில் இதுவரை 108 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய அவர், இந்த பணிகள்  தொடர்ந்து நடை பெறுவதைப் பற்றி குறிப்பிட்டார். குறிப்பிட்ட அளவிலான தொழில்நுட்பங்கள், உபகரணங்கள் மட்டுமே நம்மிடம் இருந்த போதிலும், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நமது நாடு சிறப்பாக செயல்பட்டது என்றார். கொரோனா பாதிப்பிற்குள்ளான பல்வேறு உலக நாடுகளுக்கு இந்தியா பல்வேறு வகையில் உதவியுள்ளது என்று கூறினார். இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்