கேரளாவில் நோரோ வைரஸ் தொற்று - கல்லூரி மாணவர்களுக்கு பாதிப்பு

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
கேரளாவில் நோரோ வைரஸ் தொற்று - கல்லூரி மாணவர்களுக்கு பாதிப்பு
x
கேரளாவில் பூக்கோடு கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. அசுத்தமான தண்ணீர், உணவு மூலமாகவும், பாதிக்கப்பட்ட நபர்களுடனான நேரடி தொடர்பு மூலமாகவும் இது பரவுகிறது. வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாந்தி, குமட்டல், காய்ச்சல், தலைவலி மற்றும் உடல்வலி ஆகியவை நோரோ வைரஸ் தாக்குதலின் அறிகுறிகளாகும். வயநாடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற அறிகுறிகள் தென்படுவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் மாவட்ட மருத்துவ அலுவலர் ஆர்.ரேணுகா தெரிவித்தார். நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான மாதங்களில் அதிகமாக பரவும் நோரோ வைரஸ், எல்லா வயதினரையும் பாதிக்கிறது. நோய் அறிகுறிகள் ஒன்று முதல் மூன்று நாட்களுக்குள் மறைந்துவிடும்.

Next Story

மேலும் செய்திகள்