சேலா சுரங்கப்பாதை - இறுதிக்கட்ட பணிகள்: தொடங்கி வைத்த அமைச்சர் ராஜ்நாத் சிங்

டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் எல்லை பாதுகாப்பு படை ஏற்பாடு செய்திருந்த மோட்டார் சைக்கிள் பேரணியை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
சேலா சுரங்கப்பாதை - இறுதிக்கட்ட பணிகள்: தொடங்கி வைத்த அமைச்சர் ராஜ்நாத் சிங்
x
டெல்லியில் இருந்தவாறு அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சேலா சுரங்கப்பாதையின் இறுதிக்கட்ட பணிகளை காணொலி வாயிலாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ஆயிரத்து 300 அடி உயரத்தில் அமைய இருக்கும் சேலா சுரங்கப்பாதை உலகிலேயே மிகப்பெரிய இரு வழிச்சுரங்கபாதையாக திகழும் என குறிப்பிட்டார். இந்த சுரங்கப்பாதையின் பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், ராணுவத்தில் பெண் வீரர்களின் பங்களிப்பை பாராட்டி பேசினார். அப்போது  போர் காலங்களில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் செயல்பாடுகளை நினைவு கூர்ந்தார். 


Next Story

மேலும் செய்திகள்