வரி ஏய்ப்பை தடுக்க நடவடிக்கை - ஜிஎஸ்டி தொழில்நுட்ப சீரமைப்பு குழு அமைப்பு

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக அஜித் பவார் தலைமையில் ஜிஎஸ்டி தொழில்நுட்ப சீரமைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பை தடுக்க நடவடிக்கை - ஜிஎஸ்டி தொழில்நுட்ப சீரமைப்பு குழு அமைப்பு
x
ஜிஎஸ்டி வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக அஜித் பவார் தலைமையில் ஜிஎஸ்டி தொழில்நுட்ப சீரமைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.ஜிஎஸ்டி வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக தகவல் தொழில் நுட்பத்தை மேலும் சிறப்பாக பயன்படுத்துவது குறித்தும் தொழில்நுட்ப கருவிகளில் மாற்றம் கொண்டு வருவது குறித்தும் அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்க கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.அதன்படி மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் ஜிஎஸ்டி தொழில்நுட்ப குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா,ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா உள்ளிட்ட 7 பேர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். வரி அதிகாரிகளிடம் தற்போது பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப கருவிகளை ஆய்வுசெய்து அவற்றை மேலும் சிறப்பானதாக மாற்றவும், வர்த்தக நடைமுறையில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து இந்த குழு ஆய்வு செய்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கும்







Next Story

மேலும் செய்திகள்