புதுச்சேரியில் 3 கட்ட உள்ளாட்சி தேர்தல்

புதுச்சேரியில் அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 3 கட்ட உள்ளாட்சி தேர்தல்
x
புதுச்சேரியில் அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ், மொத்தமுள்ள 5 நகராட்சிகள், 10 பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் என தெரிவித்தார். முதல்கட்டமாக காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நகராட்சிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளுக்கு அக்டோபர் 25 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. இதேபோல், பஞ்சாயத்துகளுக்கு 3ஆவது கட்டமாக அக்டோபர் 28 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.







Next Story

மேலும் செய்திகள்