"நீட் தேர்வில் மகாராஷ்டிராவுக்கு விலக்கு தேவை"; மகாராஷ்டிரா காங். தலைவர் வலியுறுத்தல் - முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம்

நீட் தேர்வில் இருந்து மகாராஷ்டிராவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தி உள்ளார்.
நீட் தேர்வில் மகாராஷ்டிராவுக்கு விலக்கு தேவை; மகாராஷ்டிரா காங். தலைவர் வலியுறுத்தல் - முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம்
x
நீட் தேர்வில் இருந்து மகாராஷ்டிராவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவுக்கு காங்கிரஸ் தலைவர் மாநிலத் தலைவர் நானா பட்டோலி. எழுதியுள்ள கடித‌த்தில், நீட் தேர்வால் மத்திய அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே பயன் பெறுவதாகவும், மாநில அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நீட் தேர்வில், வினாத்தாள் கசிவு, போலி மாணவர்கள் பங்கேற்பு உள்ளிட்ட முறைகேடுகள் தொடர் கதையாகி வருவதாக குறிப்பிட்டுள்ள நானா பட்டோலி, நீட் தேர்வு சமத்துவம் இல்லாத தேர்வு என விமர்சித்துள்ளார். எனவே நீட் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவை மகாராஷ்டிரா அரசும் பின்பற்ற வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்