புதுவை மாநிலங்களவை தேர்தலில் பாஜக போட்டி - வேட்பாளராக செல்வ கணபதி அறிவிப்பு

ராஜ்யசபா தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வகணபதி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
புதுவை மாநிலங்களவை தேர்தலில் பாஜக போட்டி - வேட்பாளராக செல்வ கணபதி அறிவிப்பு
x
ராஜ்யசபா தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வகணபதி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். புதுச்சேரி ராஜ்யசபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட அக்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வ கணபதியை வேட்பாளராக பாஜக தலைமை  அறிவித்தது. இதனைத்தொடர்ந்து, புதுச்சேரியில் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்கு சென்ற செல்வ கணபதி அங்கு முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, அவரை வேட்பாளராக அறிவித்த கட்சியின் அறிவிப்பாணையை கோயிலில் வைத்து பூஜை செய்த ரங்கசாமி அதை செல்வ கணபதியிடம் கொடுத்தார். இதையடுத்து, தன்னை வேட்பாளராக அறிவிக்க ஆதரவு அளித்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமிக்கு செல்வகணபதி நன்றியை தெரிவித்துக் கொண்டார். பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வகணபதி இன்று  பிற்பகல் 1.30 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Next Story

மேலும் செய்திகள்