நிபா வைரஸ் பாதிப்பு -சிறுவன் உயிரிழப்பு - புனேவிற்கு 25 பேரின் மாதிரிகள் அனுப்பி வைப்பு

நிபா வைரஸ் பாதிப்பு -சிறுவன் உயிரிழப்பு - புனேவிற்கு 25 பேரின் மாதிரிகள் அனுப்பி வைப்பு
நிபா வைரஸ் பாதிப்பு -சிறுவன் உயிரிழப்பு - புனேவிற்கு 25 பேரின் மாதிரிகள் அனுப்பி வைப்பு
x
நிபா வைரஸ் பாதிப்பு -சிறுவன் உயிரிழப்பு - புனேவிற்கு 25 பேரின் மாதிரிகள் அனுப்பி வைப்பு 

கேரள மாநிலம், கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், எடுக்கப்பட்ட நிபா வைரஸ் பரிசோதனைக்காக, புனேவிற்கு 25 பேரின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன.கேரளா மாநிலத்திலுள்ள கோழிக்கோட்டில் கடந்த 4 தேதி முன்னூர் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பினால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். சிறுவன் உடன், தொடர்பில் இருந்த 274 பேர் பட்டியல் கண்டுபிடிக்கப்பட்டு முதன்மை தொடர்புடைய 68 பேர் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடனடியாக ஒரே நாளில் புனே வைரலாஜி ஆய்வகத்தின் உதவியுடன் ஒரு வி.ஆர்.டி ஆய்வகம் செப்டம்பர் 6 ஆம் தேதி அமைக்கப்பட்டது. இந்த ஆய்வகத்தில் RTPCR மற்றும் NIPA வைரஸ் சோதனைக்கான பாயிண்ட் ஆஃப் கேர்  (ட்ரூனட்) பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த ஆய்வகத்தில் ஆறு நாட்களில் 115 பேரின்  மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இதில் யாருக்கும் நிபா வைரஸ்  பாதிப்பு இல்லை என கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். மேலும் இவர்களில், 25 பேரின் மாதிரிகள், தற்போது புனேவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. 
 
Next Story

மேலும் செய்திகள்