விமான நிலைய பொருளாதார திருத்த மசோதா - மசோதாவுக்கு வரவேற்பு அளித்துள்ள அதிமுக

விமான நிலைய பொருளாதார ஒழுங்கு முறை ஆணைய மசோதா மாநிலங்களவையில் இன்று அமளிக்கிடையே குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
விமான நிலைய பொருளாதார திருத்த மசோதா - மசோதாவுக்கு வரவேற்பு அளித்துள்ள அதிமுக
x
இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய, அதிமுக எம்.பி. தம்பிதுரை மசோதாவிற்கு வரவேற்பு தெரிவித்தார். மேலும் இந்த மசோதா மூலம் சிறு விமான நிலையங்கள் மேம்பாட்டுக்கு ஊக்கம் அளிக்கும் என தெரிவித்தார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விமானநிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணைய மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டு இந்த மசோதா தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது.விமான நிலையங்களில் விமான சேவைக் கட்டணங்களை முறைப்படுத்த AERA வுக்கு இந்த மசோதா அதிகாரம் வழங்குகிறது. பெரிய விமான நிலையங்களுக்கு வரையறையை மாற்றி அமைக்கவும் பல்வேறு சிறு விமான நிலையங்களை குழுவாக நிர்ணயித்து ஒரே மாதிரி கட்டணத்தை வைக்கவும் மசோதா வழிவகை செய்கிறது.


Next Story

மேலும் செய்திகள்