ட்ரோன் மூலம் பறந்து வந்த வெடிபொருட்கள் - சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படை வீரர்கள்

காஸ்மீர் எல்லைப் பகுதியில், வெடிப் பொருட்களை ஏற்றி பறந்து வந்த ட்ரோன் ஒன்றை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
ட்ரோன் மூலம் பறந்து வந்த வெடிபொருட்கள் - சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படை வீரர்கள்
x
ஜம்முவில் உள்ள இந்திய விமானப் படையின் தளத்தின் மீது கடந்த மாதம் 27ஆம் தேதி ட்ரோன்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் இரண்டு விமானப் படை வீரர்கள் காயமடைந்தனர்.இதைத் தொடர்ந்து ட்ரோன்களுக்கு எதிரான உபகரணங்களை வாங்க, இந்திய அரசு முடிவு செய்தது. எல்லைப் பகுதிகளில் மிக நவீன கேமிராக்கள் முலம் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில் வெள்ளியன்று காலை, பாகிஸ்தானில் இருந்து எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து, இந்திய பகுதியில் உள்ள அக்கனூர் குரா பட்டன் பகுதியில் ஒரு ட்ரோன் பறந்து வருவது கண்டறியப்பட்டு, சுட்டு வீழ்த்தப்பட்டது.இந்த ட்ரோனில் 5 கிலோ கிராம் எடை கொண்ட வெடிப் பொருட்கள், ஒரு பிளாஸ்டிக் உறையில் சுற்றப்பட்டு, இணைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.வெடி பொருட்கள் அடங்கிய இந்த பிளாஸ்டிக் பொட்டலத்தை, எல்லைப் பகுதிக்கு அருகே உள்ள குறிப்பிட்ட இடத்தில் தரையிறக்கி, பயங்கரவாதிகளுக்கு கிடைக்க செய்ய திட்டமிட்டிருந்தாக கருதப்படுகிறது.சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோனில் இருந்து இந்த வெடிப் பொருட்களை கைபற்றிய காஸ்மீர் காவல் துறையினர், பின்னர் இதை ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்து வெடிக்க செய்து, அழித்தனர். 
லக்‌ஷர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு இதை ட்ரோன் மூலம் அனுப்பியிருக்கலாம் என்று பாதுகாப்பு படை அதிகாரிகள் கருதுகின்றனர்.
ஜம்மு காஸ்மீர் மற்றும் லடாக் பகுதிகளுக்கு, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் செல்வதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு இந்த ட்ரோன் கண்டறியப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




Next Story

மேலும் செய்திகள்