"கொரோனா அவசரகால நிதி ரூ.23,123 கோடி ஒதுக்கீடு"

கொரோனா தடுப்பு பணிகளுக்கு இரண்டாம் கட்ட அவசரகால நிதியாக 23 ஆயிரத்து 123 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
x
புதிதாக மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், சுகாதார அமைச்சர் மன்சூக் மாண்டவியா மற்றும் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கினர். 

அப்போது கொரோனாவை எதிர்கொள்ள ஏதுவாக சுகாதார மற்றும் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்த இரண்டாம் கட்ட அவசரகால நிதியாக 23 ஆயிரத்து 123 கோடி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் மன்சூக் மாண்டவியா தெரிவித்தார்.

கொரோனா சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்குதல், ஐசியூ படுக்கை, ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்ட சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்காக இந்த நிதி செலவிடப்பட உள்ளது

இந்த நிதியில் இருந்து மாநிலங்களுக்கு 8 ஆயிரத்து 123 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. 

மீதமுள்ள தொகையில் இருந்து பொது சுகாதார கட்டமைப்புகளில் 20 ஆயிரம் ஐ.சி.யூ படுக்கைகள் ஏற்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் மன்சூக் மாண்டவியா தெரிவித்தார். 

இவற்றில் 20% சதவீதம் குழந்தைகளுக்கான ஐசியு படுக்கைகளாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இவை தவிர நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசு மருத்துவமனைகள், எய்ம்ஸ், மருத்துவ கல்லூரிகள் உள்ளிட்டவற்றில் குழந்தைகளுக்கான பிரத்யேக மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார். 

நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிதாக ஆயிரத்து 50 மருத்துவ ஆக்ஸிஜன் சேமிப்பு டேங்கர் ஏற்படுத்தப்படும் என அவர் கூறினார். 
 
தற்போது இருக்கும் ஆம்புலன்ஸ் சேவையுடன் கூடுதலாக 8 ஆயிரத்து 800 ஆம்புலன்ஸ்கள் இணைக்கப்படும் என, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 




Next Story

மேலும் செய்திகள்