இந்தியாவில் புதிய கொரோனா தடுப்பூசி

கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து, இந்தியாவில் அடுத்து தயாராகி வரும் கோர்பவேகஸ் தடுப்பூசி விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
இந்தியாவில்  புதிய கொரோனா தடுப்பூசி
x
கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து, இந்தியாவில் அடுத்து தயாராகி வரும் கோர்பவேகஸ் தடுப்பூசி விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

கோர்பவேக்ஸ் தடுப்பூசியை பயலாஜி பார்மசூட்டிக்கல் என்ற ஐதராபாத் நிறுவனம் தயாரிக்கிறது.. 

கடந்த 73 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த நிறுவனம், தட்டம்மை ரூபெல்லா போன்ற நோய்களை எதிர்த்து 8 தடுப்பூசிகளை  தயாரித்து வருகிறது. 

இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம், தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனைகளை நடத்தி வருகிறது. 

இதற்கிடையே இந்த தடுப்பூசி 90% பாதுகாப்பு வழங்கக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 

300 மில்லியன் டோஸ் கோர்பவேகஸ் தடுப்பூசியை தயாரிக்க மத்திய அரசு, ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது.

இந்த தடுப்பூசி இரண்டு டோஸ்களாக 28 நாள் இடைவெளியில் வழங்கப்படும் என்றும், 

இந்தியா முழுவதும் 15 இடங்களில் 18 முதல் 60 வயதுக்குள் இருக்கும் ஆயிரத்து 268 பேர் மீது இந்த தடுப்பூசி சோதனை நடைபெறுகிறது.

இந்நிலையில், கோர்பவேகஸ் தடுப்பூசி அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்ப்பதாக மத்திய நிபுணர்கள் குழுவின் தலைவர் அரோரா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி 76 சதவீதம் பாதுகாப்பும், கோவாக்சின் 81 சதவீதம் பாதுகாப்பும், ஸ்புட்னிக் வி 90% பாதுகாப்பும் தருகிறது.


Next Story

மேலும் செய்திகள்