"மத்திய பிரதேசத்தில் புதிய வகை கொரோனா" - ம.பி. மருத்துவக் கல்வி அமைச்சர் தகவல்

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக அம்மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் கூறி உள்ளார்.
மத்திய பிரதேசத்தில் புதிய வகை கொரோனா - ம.பி. மருத்துவக் கல்வி அமைச்சர் தகவல்
x
"மத்திய பிரதேசத்தில் புதிய வகை கொரோனா" - ம.பி. மருத்துவக் கல்வி அமைச்சர் தகவல் 

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக அம்மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் கூறி உள்ளார்.இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் டெல்டா வகை என அடையாளம் காணப்பட்டு உள்ளது. டெல்டா வகை வைரஸ் உருமாற்றம் அடைந்து டெல்டா பிளஸ் என்ற புதிய வகை  உருவாவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேச தலைநகர் போபாலில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ஆய்வு நடைபெறுவதாகவும், பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த நபர்களை கண்டறியும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அம்மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் தெரிவித்து உள்ளார். 
 

Next Story

மேலும் செய்திகள்