ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி - இந்திய ரயில்வேயின் ரயில்கள் தீவிரம்

நாடு முழுவதும் 9 ஆயிரத்து 440 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை இந்திய ரயில்வே டேங்கர்கள் மூலம் பல மாநிலங்களுக்கு விநியோகித்துள்ளது.
ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி - இந்திய ரயில்வேயின் ரயில்கள் தீவிரம்
x
நாட்டில் ஆக்சிஜன் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில், ரயில் போக்குவரத்து மூலம் ஆக்சிஜனை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ரயில்வே, இதுவரை 150 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தங்கள் பயணத்தை முடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது 55 டேங்கர்களில் 970 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனுடன், 12 ரயில்கள் சென்று கொண்டிருப்பதாகவும், தேசிய தலைநகர் மண்டலத்துக்கு விநியோகிக்கப்பட்ட ஆக்ஸிஜன் அளவு 5ஆயிரம் மெட்ரிக் டன்களை கடந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், நாளொன்றுக்கு சுமார் 800 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை விநியோகித்து வருகின்றன என தெரிவித்துள்ள இந்திய ரயில்வே, சுமார் 590 டேங்கர்கள் மூலம் 9 ஆயிரத்து 440 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை விநியோகித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்