கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகத்திற்கு 533.2 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு

கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகத்திற்கு 533.2 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், பெரும்பாலான மாநிலங்கள் பொது முடக்கத்தை அறிவித்துள்ளன.
கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகத்திற்கு 533.2 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு
x
கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகத்திற்கு 533.2 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், பெரும்பாலான மாநிலங்கள் பொது முடக்கத்தை அறிவித்துள்ளன. இதனால் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மாநிலங்கள், மத்திய அரசு தங்களுக்கு தரவேண்டிய நிதியை ஒதுக்க வேண்டும் என கோரி வருகின்றன. இந்நிலையில், மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் வரும் செலவினங்கள் துறை, 25 மாநிலங்களில்  உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 8,923.8 கோடி நிதியை ஒதுக்கி உள்ளது. 15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி இந்த நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.கொரோனா காலம் என்பதால், வழக்கத்தை விட முன்கூட்டியே மத்திய அரசு இந்த நிதியை விடுவித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டுக்கான முதல் ஒதுக்கீடு என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த நிதியை கொரோனா தடுப்பு பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு 533.2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்