தேர்தல் சிறப்பு பார்வையாளர்கள் உடன் ஆலோசனை - அறிவுரைகளை வழங்கிய, தலைமை தேர்தல் ஆணையர்

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பணபலம், இலவசம் மற்றும் மது புழக்கத்தை கட்டுப்படுத்த முழு ஈடுபாட்டுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிறப்பு பார்வையாளர்களை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் சிறப்பு பார்வையாளர்கள் உடன் ஆலோசனை - அறிவுரைகளை வழங்கிய, தலைமை தேர்தல் ஆணையர்
x
5 மாநில சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி செலவின பார்வையாளர்கள், பொது மற்றும் காவல் பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை மேற்கொண்டார். டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ஆயிரத்து 650 - க்கும் மேற்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், வாக்காளர்கள் அணுகும் வகையில் தேர்தல் பார்வையாளர்கள் இருக்க வேண்டும், குடி மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை தேர்தல் பார்வையாளர்கள் உறுதி செய்ய வேண்டுமென என தேர்தல் பார்வையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எந்த ஒரு தேர்தல் பார்வையாளராவது கவனக் குறைவுடன் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா எச்சரிக்கை விடுத்தார். மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் ஆணையம் வழங்கும் வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என சுனில் அரோரா வலியுறுத்தினார். தேர்தல் பார்வையாளர்களின் தலையீடு வாக்காளர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைப்பதாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தேர்தலில், பணபலம், இலவசம் மற்றும் மது புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிறப்பு பார்வையாளர்களை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்