குறிப்பிட்ட கணக்குளை முடக்க கூறிய மத்திய அரசு - மறுப்பு தெரிவித்த டிவிட்டர் நிறுவனம்

விவசாயிகள் போராட்டங்கள் பற்றிய சர்ச்சைக்குரிய டிவிட்டர் கணக்குகளை தடை செய்ய மத்திய அரசு விடுத்த கோரிக்கையை டிவிட்டர் நிறுவனம் நிராகரித்துள்ளது.
குறிப்பிட்ட கணக்குளை முடக்க கூறிய மத்திய அரசு - மறுப்பு தெரிவித்த டிவிட்டர் நிறுவனம்
x
விவசாயிகள் போராட்டங்கள் பற்றிய சர்ச்சைக்குரிய டிவிட்டர் கணக்குகளை தடை செய்ய மத்திய அரசு விடுத்த கோரிக்கையை டிவிட்டர் நிறுவனம் நிராகரித்துள்ளது.  

குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இது குறித்து டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் வன்முறையை தூண்டுபவர்களின் கணக்குகளை முடக்க கோரி, டிவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு, ஒரு பெரிய பட்டியலை அளித்தது. ஆனால் அந்த பட்டியலில் உள்ள அனைவரின் டிவிட்டர் கணக்குகளையும் முடக்க டிவிட்டர் மறுத்து விட்டது. இது குறித்து டிவிட்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேரடியாக வன்முறையை, வெறுப்பை தூண்டும் 500 டிவிட்டர் கணக்குகளை மட்டும் முடக்கியுள்ளதாக கூறியுள்ளது. ஆனால் பல அரசியல்வாதிகள், ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், செயல்பாட்டாளர்களின் டிவிட்டர் கணக்குகளை முடக்க மறுத்துள்ளது. அப்படி முடக்குவது இந்திய சட்ட விதிமுறைகளுக்கு முரண் என்றும், பேச்சு சுதந்திரம், கருத்துரிமை ஆகியவற்றிற்கு முரணானது என்று டிவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது. இதைப் பற்றிய தங்களின் நிலைபாட்டை, மத்திய அரசின்  மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக டிவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்