ஐ.என்.எஸ். விராட்டை உடைக்க இடைக்கால தடை - உச்சநீதிமன்றம்

ஐ.என்.எஸ். விராட் விமானம் தாங்கிய போர்க்கப்பலை உடைப்பதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஐ.என்.எஸ். விராட்டை உடைக்க இடைக்கால தடை - உச்சநீதிமன்றம்
x
ஐ.என்.எஸ். விராட் விமானம் தாங்கிய போர்க்கப்பலை உடைப்பதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

இந்திய கடற்படையில் 1987-ல் இணைக்கப்பட்ட போர்க்கப்பல் ஐ.என்.எஸ். விராட்டுக்கு 2017-ல் படையிலிருந்து ஓய்வு வழங்கப்பட்டது. இந்த கப்பலை ஸ்ரீராம் குழுமம் 38 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதற்கிடையே ஐ.என்.எஸ். விராட் கப்பலை அருங்காட்சியகமாக மாற்றுவதற்கு மும்பையை சேர்ந்த என்விடெக் மெரைன் கன்சல்டன்ஸ் நிறுவனம் விரும்பியது. மேலும் 110 கோடி ரூபாய்க்கு கப்பலை வாங்க முடிவு செய்தது. ஆனால், அதற்கு பாதுகாப்பு அமைச்சகம் தடையில்லா சான்றிதழ் வழங்க மறுக்கவே, நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடியது.  இதற்கிடையே கப்பல் பகுதி உடைந்த நிலையிலான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது நிறுவனம் தாக்கல் செய்த மனு குறித்து விசாரித்த நீதிமன்றம், கப்பலை மேற்கொண்டு உடைப்பதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்