ருத்ர தாண்டவம் ஆடிய இயற்கை
பதிவு : பிப்ரவரி 08, 2021, 02:39 PM
உத்தரகாண்டில் பனிப்பாறைகள் வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமாகியுள்ள 170 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உத்தரகாண்டில் பனிப்பாறைகள் வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமாகியுள்ள 170 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

உத்தரபிரதேசத்தில் இயற்கை அண்ணை நிகழ்த்திய ரூத்ர தாண்டவ காட்சிகள் தான் இவை. அந்த மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் ஜோஷிமத் மலைப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மலைப்பகுதியில் நீர்மின் பனிப்பாறைகள் திடீரென வெடித்து உருகியது. இதனால் தவுலிகங்கா ஆறுகளில் திட்டத்திற்காக கட்டப்பட்ட 2 கட்டமைப்புகள் அடுத்தடுத்து உடைத்தன.

கரைபுரண்டு ஓடிய வெள்ளம் கிராமங்களுக்குள் பாய்ந்ததில் 200-க்கும் மேற்பட்டவர்கள் அடித்து செல்லப்பட்ட நிலையில், பலர் உயிரிடனும், சிலர் சடலமாகவும் மீட்கப்பட்டனர்.

எனினும் மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியை மேற்கொண்டு வரும் நிலையில் 170-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமமே பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளது. வெள்ளத்துடன் சேர்ந்த பாறைகளும் அதிவேகத்தில் வந்ததால் ஒன்றும் செய்யமுடிவில்லை என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். 

காணாமல் போனவர்களின் பெரும்பாலானோர் நீர்மின் திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் தான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் 50 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே சுரங்கத்தில் கும்பைகளுடன் சிக்கியிருந்த 16 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 

வெள்ளத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உத்தரகாண்ட் மாநில அரசு  சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் அறிவித்துள்ளார். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி,  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், என பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதேபோல் உலக நாட்டு தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளளனர். பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல், அமெரிக்க உள்துறை, ஆஸ்திரேலிய துணை பிரதமர், நேபாள நாட்டு வெளியுறவுத்துறை என உலக நாடுகள் தங்களது இரங்கலையும் உயிரிழந்தவர்களின்  குடும்பங்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளன. 

இந்த இயற்கை பேரிடரில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

399 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

208 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

55 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

47 views

பிற செய்திகள்

மொட்டேரா மைதானம் பெயர் மாற்றம் - திரிஷ்யம் 2 க்ளைமேக்ஸை ஒப்பிட்டு விமர்சனம்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பெயர் சூட்டப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

151 views

பல கவிஞர்களின் தாய்வீடு புதுச்சேரி - பிரதமர் நரேந்திர மோடி

புதுச்சேரி மக்கள் மிகவும் திறமைசாலிகள் என்றும், புதுச்சேரியின் வளர்ச்சிக்கு உதவ உறுதி அளிப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார்.

76 views

கோயில் வளாகத்தில் யானைகள் பந்தயம் - துள்ளி குதித்து ஓடிய யானைகள்

கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் யானை பந்தயம் உற்சாகமாக நடத்தப்பட்டது.

23 views

ராகுல்காந்தி பேசியது தவறு- காங்கிரஸ் எம்.எல்.ஏ. அதிதி சிங்

கேரளா மாநிலம் வயநாடு தொகுதி மக்கள், தங்கள் பிரச்சினைகளை தெளிவாக எடுத்து வைப்பதாகவும், அதன் மீது நல்ல புரிதலுடன் இருப்பதாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார்.

33 views

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சி - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

68 views

இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மம்தா முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து உள்ளார்

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.