கேரளாவில் டாலர் கடத்தல் விவகாரம் - ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனுக்கு ஜாமின்

கேரளாவின் தங்க கடத்தல் விவகாரம் தொடர்புடைய டாலர் கடத்தல் வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனுக்கு ஜாமின் வழங்கிய நிலையில், சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
கேரளாவில் டாலர் கடத்தல் விவகாரம் - ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனுக்கு ஜாமின்
x
கேரள தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனிடையே தங்க கடத்தல், டாலர் கடத்தல், கருப்பு பண விவகாரம் உள்ளிட்ட வழக்குகளில் சிவசங்கரன் கைது செய்யப்பட்டார். இதனிடையே 3 வழக்குகளிலும் ஜாமின் கேட்டு சிவசங்கரன் மனு தாக்கல் செய்தார். இதில் ஏற்கனவே சுங்கத்துறை பதிவு செய்த தங்க கடத்தல் வழக்கு, அமலாக்கத்துறை பதிவு செய்த கருப்பு பணம் தொடர்பான வழக்கில் ஜாமின் வழங்கப்பட்டது. இந்நிலையில் எர்ணாகுளம் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் டாலர் கடத்தல் தொடர்பான வழக்கில் சிவசங்கரனுக்கு ஜாமீன் வழங்கியது. 3 வழக்குகளிலும் ஜாமின் கிடைத்ததால் கடந்த அக்டோபர் 28ஆம் தேதி கைது செய்யப்பட்ட இவர், 98 நாட்கள் சிறைவாசத்திற்கு பின் விடுவிக்கப்பட்டார். இதனிடையே, டாலர் கடத்தல் வழக்கில் 2 லட்ச ரூபாய் பிணைத்தொகையாக செலுத்த வேண்டும் என்றும், திங்கட்கிழமைகளில் சுங்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்