இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு - ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடம்

கொரோனா காலகட்டத்திலும் இந்தியாவில் 100 கோடி டாலர்கள் சொத்து மதிப்பு கொண்ட பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டை விட அதிகரித்துள்ளது.
இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு - ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடம்
x
கொரோனா காலகட்டத்திலும் இந்தியாவில் 100 கோடி டாலர்கள் சொத்து மதிப்பு கொண்ட பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டை விட அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த பட்டியலில் 80 பேர் இடம்பிடித்திருந்த நிலையில், இந்த ஆண்டு இறுதியில் 90 பேர்  இடம் பிடித்துள்ளனர். இந்திய பங்குச் சந்தைகளின் மொத்த மதிப்பு வெகுவாக அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த 90 கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஒரு ஆண்டில் 33 சதவீதம் அதிகரித்து, 483 பில்லியன் டாலராக உள்ளது. இந்திய பணக்காரர் பட்டியலில் தொடர்ந்து ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 37 புள்ளி 2 சதவீதம் அதிகரித்து, 6 லட்சத்து 43 ஆயிரம் கோடியாக உள்ளது


Next Story

மேலும் செய்திகள்