"மத்திய அரசு ஒருபோதும் கைவிடாது" - மத்திய வேளாண் அமைச்சர், விவசாயிகளுக்கு கடிதம்

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயத்தை மத்திய அரசு ஒருபோதும் கைவிடாது என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு ஒருபோதும் கைவிடாது - மத்திய வேளாண் அமைச்சர், விவசாயிகளுக்கு கடிதம்
x
மத்திய பாஜக அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப் விவசாயிகள், தலைநகர் டெல்லி செல்லும் சாலைகளை நிறைத்து போராடி வருகின்றனர். அவர்களின் டெல்லி சலோ எனும் போராட்டம் 22 நாட்களை கடந்துள்ள நிலையில், கடும் பனி மற்றும் குளிரில் போராடி வருகின்றனர். மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில், முற்றிலுமாக 3 சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

பேச்சுவார்த்தை கைகொடுக்காத நிலையில், மத்திய அரசு விழிப்புணர்வு பிரசாரங்களை தொடங்கியுள்ளது. இதனிடையே, இந்த விவகாரம் குறித்து கூட்டப்பட்ட டெல்லி சட்டமன்றத்தில், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பாஜக அரசின் வேளாண் சட்டங்களை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கிழித்து வீசினர்.

இதனிடையே, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தானும் ஒரு விவசாயிதான் என கூறியுள்ளார். குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயத்தை கைவிடமாட்டோம் என குறிபிட்டுள்ள தோமர், விளை நிலங்கள் பறிக்கப்படும் என்பது எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரம் என விளக்கியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்