இந்திய பொருளாதாரம் 7.5 சதவீதம் சரிவு - மீட்சிப்பாதையில் நாட்டின் உற்பத்தி துறை

இரண்டாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 7.5 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
இந்திய பொருளாதாரம் 7.5 சதவீதம் சரிவு - மீட்சிப்பாதையில் நாட்டின் உற்பத்தி துறை
x
கொரோனா பெருந்தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, பொது முடக்கத்தால் 2020-21 நிதி ஆண்டின் முதல் காலாண்டில், இந்திய பொருளாதாரம் 23.9 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. செப்டம்பரில் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் 7.5 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. ஆனால், உற்பத்தி துறை 0.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, முதல் காலாண்டில் 39 சதவீதம் சரிவை சந்தித்திருந்தது. விவசாய துறை 3.4 சதவீதம், மின்சக்தி மற்றும் எரிவாயு துறை 4.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த புள்ளி விவரங்களை மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்