நவ.7- ல் EOS 01 செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி சி -49 விண்ணில் பாயும் - விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவிப்பு

நவம்பர் 7 ம் தேதி EOS-01 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி சி -49 ராக்கெட் விண்ணில் பாய்கிறது
நவ.7- ல் EOS 01 செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி சி -49 விண்ணில் பாயும் - விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவிப்பு
x
பி.எஸ்.எல்.வி சி -49 ராக்கெட்,  இஸ்ரோ தயாரித்துள்ள  EOS-01 என்ற செயற்கைகோள் மற்றும் பிற  நாடுகளை சேர்ந்த  வணிக ரீதியிலான 9 செயற்கைகோளை  சுமந்தபடி நவம்பர் 7 ம் தேதி மதியம் 3. 02 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து  விண்ணில் செலுத்த திட்டமிட்டு இருப்பதாக  இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது வேளாண்மை வனவியல் பேரிடர் மேலாண்மை ஆகிய பயன்பாடுகளுக்கான ஒரு பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும்.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் விண்ணில் செலுத்த திட்டமிட்டு இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்ணில் செலுத்தப்படும் போது, பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் இஸ்ரோவின் சமூகவலைத்தள பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்