காரை மறித்த போலீசார் மீது காரை ஏற்ற முயற்சி - காரின் முன்பகுதியில் போலீசார் போராடும் சிசிடிவி காட்சி

டெல்லியில் போக்குவரத்து போலீசார் மீது காரை ஏற்ற முயற்சி செய்த கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
காரை மறித்த போலீசார் மீது காரை ஏற்ற முயற்சி - காரின் முன்பகுதியில் போலீசார் போராடும் சிசிடிவி காட்சி
x
டெல்லியில் போக்குவரத்து போலீசார் மீது காரை ஏற்ற முயற்சி செய்த கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். தவுலா குவான் பகுதியில் 12-ம் தேதி சாலை விதிகளை மீறிய காரை, அப்பகுதியில் நின்ற போக்குவரத்து போலீசார் நிறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஓட்டுநர், போலீசார் மீது காரை ஏற்ற முயற்சித்துள்ளார். இதில் நிலைத்தடுமாறிய போலீசார், காரின் முன்பக்கத்தில் ஏறியிருக்கிறார்.  இதனையடுத்து ஓட்டுநர் அங்கும் இங்குமாக காரை வேகமாக ஓட்டியதும் போலீசார் நிலைத்தடுமாறி விழுந்துள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்